யாழ், கம்பஹா மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டு நீளமானது – தேர்தல்கள் செயலகம்
யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்காக அச்சிடப்பட இருக்கின்ற வாக்குச்சீட்டுகள் மிக நீளமாக (23″) அமையும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் திகாமடுல்ல ஆகிய மாவட்டங்களுக்காக அச்சிடப்படவேண்டிய வாக்குச்சீட்டுகள் அகலமாக (9″) அமையும் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு கப்பஹா மாவட்டத்திலிருந்து 18 உறுப்பினர்களை தெரிவு செய்யும் அதேவேளை யாழ் மாவட்டத்திற்கு 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவ்விரு மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் நீளமானதாக அச்சிடப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Comments are closed.