Zoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் – இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை
Zoom தொழில்நுட்பத்தின் 4.6.10 முறைமையின் (Zoom Application version 4.6.10) ஊடாக அதனைப் பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழுவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Zoom முறைமையில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் ஊடாகத் தகவல்களைத் திருடுவதற்காக இரு வாய்ப்புக்கள் காணப்படுகின்றமை சைபர் பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.
அதன்படி இந்த Zoom முறைமையின் பயனர்கள் தமது கலந்துரையாடல்களின் போது ஜிப் (GIF) வீடியோக்களைப் பரிமாற அனுமதிகப்பபடுக்கின்றமையினால் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அதேபோன்று Zoom முறைமையை பயன்படுத்துவதற்காக இரகசிய இலக்கத்தை (Process code) கலந்துரையாடல்களில் பரிமாறுவதன் மூலமும் இந்த முறைமையில் தகவல்கள் களவாடப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதனூடாக மிகவும் இரகசியமான தகவல்கள் கூட தொடர்பற்ற மூன்றாம் தரப்பினருக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக இருப்பதாக இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments are closed.