மத்திய வங்கி ஆளுநருக்கும் அதிகாரிகளுக்கும் 24 மணி நேர கால கெடு: முடியாவிட்டால் விலகி சென்றுவிடுங்கள்..! – ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இன்று ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அரசாங்கம் முடிவுகளை நிறைவேற்றத் தவறியதற்கு மத்திய வங்கி தான் காரணம் என அவர்கள் மீது குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்தின் முடிவுகளை முறையாக செயல்படுத்த முடியாவிட்டால் ராஜினாமா செய்யுமாறும் ஜனாதிபதி அவர்களிடம் கூறியுள்ளார்.
தி ஃபைனான்ஸ் நிறுவனத்தை கலைப்பதற்கும் , அதன் கடனை மீட்ட மறு நிதியளிப்பதற்கும் மத்திய வங்கி இதுவரை ஒதுக்க வேண்டிய ரூ. 150 பில்லியனை ஒதுக்கவில்லை . அது குறித்து 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறு கோட்டபய ராஜபக்சே கேட்டுக் கொண்டார். ஏனைய நாடுகள் கொரோனா தொற்றால் வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தை நிலை நிறுத்த கடும் பிரயத்தனங்களை செய்கின்றன. அதில் ஒன்றைக் கூட நீங்கள் செய்யவில்லை. நீங்கள்தான் எனக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.அது மட்டுமல்ல நான் சொல்வதைக் கூட நீங்கள் முறையாக செயல்படுத்துகிறீர்கள் இல்லை. அதனால் எனக்கும் அரசுக்கும்தான் கெட்ட பெயர்.
பொதுக் கொள்கைகளையும் முடிவுகளையும் முறையாக எடுக்க மத்திய வங்கி தவறிவிட்டது, இதுவரை எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவுகளுக்கு மத்திய வங்கியே முக்கிய குற்றவாளி என்றார் அவர்.
அரசாங்கக் கொள்கைகளுக்கு இணங்க முடியாவிட்டால் , பதவிகளை ராஜினாமா செய்யுமாறு அவர் கடுமையாக சாடியுள்ளார்.
“முந்தைய அரசாங்கத்தின் தவறுகளையே சொல்லிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. அது எனக்கு தேவையில்லை. நம் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய ஆலோசனைகளை முன் வைக்க முன்வருங்கள் ..
“உங்களுக்கு இன்னும் 24 மணி நேர கால அவகாசம் தருகிறேன். அதற்குள் எதையும் செய்ய முடியாதென்றால் உங்கள் பதவிகளை விட்டு சென்று விடுங்கள் ” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடுமையாக தெரிவித்துள்ளார்.
வீடியோ இணைப்பு :
Comments are closed.