கொரோனா நுண்மித் தாக்கம் குறித்த பரிசோதனைகள் துல்லியமானவையா?
கொரோனா நுண்மித் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து நடாத்தப்படும் பரிசோதனைகளில் நோய்த் தொற்று இல்லை என தெரியவந்தாலும் அது நூறு வீதம் சரியானதல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
பரிசோதனைகளின் போது ஒருவருக்கு தொற்று கிடையாது என முடிவு கிடைத்தாலும் அது கொரோனா தொற்றில்லை என்பதற்கான உறுதிமொழியாகாது.
பரிசோதனைகளின் துல்லியத்தன்மை தொடர்பில் பெரும் சிக்கல் நிலைமை நீடித்து வருவதனால் நோய்த் தொற்றாளிகளை கண்டறிவதில் சிரமங்கள் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா நோய்த் தொற்று குறித்த பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் பாரியளவில் மாறுபட்ட முடிவுகளை தருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நோய்த் தொற்று பரவிய முதல் நாளில் பரிசோதனை செய்தால் 100 வீதம் பிழையான தகவல் கிடைக்கும் எனவும், 4ம் நாளில் பரிசோதனை நடாத்தினால் தொற்று பாதிப்பில்லை என பிழையான தகவல் கிடைப்பதற்கு 67 வீத வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையில் நோய்த் தொற்று பரவியிருந்தாலும் இது பற்றிய சரியான தகவல்களை அறிந்துகொள்வதில் பெரும் சிக்கல்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏன் இவ்வாறு போலியான தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன என்பதற்கான திடமான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.