வாக்குச்சாவடியில் ஒரு நிமிடத்துக்கு ஒரு ஆள் என்பது அது நல்லதில்லை – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்
ஒரு நிமிடத்துக்கு இரண்டு பேர் வாக்களிப்பதென்பது ஒரு நல்ல விளைவாக அமையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் ஒத்திகை நடவடிக்கையில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு வெவ்வேறு வேறு இடங்களில் வெவ்வேறு தேர்தல் ஒத்திகை முடிவுகள் வந்துள்ள நிலையில், முல்லைத்தீவில் ஒரு நிமிடத்துக்கு ஒருவர் என்ற நிலையில் ஒத்திகை நிகழ்வுகள் நடந்தேறியது.
இதனால் 800 பேர் கொண்ட ஒரு வாக்குச்சாவடியில் 800 நிமிடம் என்றால் அது சாத்தியமான விடயமல்ல என பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சுட்டிக்காட்டிள்ளார்.
தேர்தல் ஆரம்பித்த அதே நாளில் முடித்துவிட வேண்டுமென தெரிவித் பேராசிரியர், எந்தக் கட்சிக்கென்றாலும் பரவாயில்லை எல்லாரும் வாக்களித்தால் அது உண்மையான ஒரு ஜனநாயக முடிவைக் காட்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்
Comments are closed.