பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவம் மிக முக்கியமானது – அப்துல் சத்தார்
பாரிஸ் ஹாஜியாருக்கு அளிக்கும் வாக்குகள் மூலம் தான் எதிர்காலத்தில் கண்டி மாவட்ட முஸ்லிம்களுடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்த தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஸ்ரீலங்கா பொது ஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார்
கண்டியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இம்முறை பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவம் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையே. 170 முஸ்லிம் வாக்குகள் இருந்த போதிலும் கண்டியில் இருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றோம் ஆதலால் முஸ்லிம்களுக்கு உள்ள ஒரே வழி பெரும்பான்மையான வாக்குகள் பாரிஸ் ஹாஜிக்கு அளிக்கும் வாக்குகள் மூலம் தான் எதர்காலத்தில் கண்டி மாவட்ட முஸ்லிம்களுடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்த தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழியாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட முஸ்லிம் மக்களின் நலனை மையப்படுத்தி கண்டியிலுள்ள மக்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு தொடர்ச்சியாய் அறை கூவல் விடுத்து வருகின்றோம். ஏற்கெனவே ஜனாதிபதித் தேர்தலின் போது செய்த தவறை உணர்ந்து செயற்பட வேண்டிய தருணத்தில் நாங்கள் இன்று இருந்து கொண்டிருக்கின்றோம். ஆளும் தரப்பில் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை இம்முறை உணர்ந்து செயற்படா விட்டால் இம்மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைவார் என்று கருத வேண்டாம். கண்டி மாவட்ட ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் தோல்வியை எதிர் நோக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதே யாதார்த்தமான பார்வையாக உள்ளது.
இந்த உண்மையை கண்டி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உணர வேண்டும். முஸ்லிம் பிரதிநிதித்துவம் மற்றும் ஆட்சிப் பரப்பில் செல்வாக்கு இழந்த நிலையில் வாடும் முஸ்லிம்களுக்கு தேவைகளையும் அரசியல் வரப்பிரகாசங்களையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். எதிர்க்கட்சியில் அமரப் போவோர்களுக்கு எமது வாக்குகளை வீணாகப் பயன்படுத்துவார்களாயின் அந்த வாக்கு வெறும் வெற்றுப் பெட்டிக்குள் போடும் வாக்காகவே கருதப்படும்.
கண்டி மாவட்டத்தைப் பொறுத்த வரையிலும் முஸ்லிம் ஆளும் தரப்பில் முஸ்லிம் பிரதிநித்துவம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்தும் பட்சத்தில் பாரிஸ் ஹாஜியாரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.
இந்நிலையில் அரசியல் அனாதையாக்கப்பட்டு வாழும் கண்டி மாவட்ட முஸ்லிம் மக்களின் இருப்புக்கள் முழுமையாக பாரிஸ் ஹாஜியாரின் வெற்றியின் மூலம் பாதுகாக்கும் நிலை ஏற்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
– இக்பால் அலி
Comments are closed.