மத்திய வங்கி தலைவர் பதவி விலக உள்ளதாக தகவல்?
இலங்கை மத்திய வங்கியின் தலைவர் பேராசிரியர். திரு. W.D. லக்ஸ்மன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய வங்கியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை மத்திய வங்கி மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் நேற்று (16) கலந்து கொண்ட கூட்டத்தில் மத்திய வங்கியின் செயல்பாடுகள் , ஜனாதிபதியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
நாட்டின் பொருளாதாரம் சரிந்தபோது மத்திய வங்கி அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆதரவளிக்க முடியாவிட்டால், அவர்களை உடனடியாக விலக வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கை மத்திய வங்கியின் தலைவர் பேராசிரியர். திரு. லக்ஸ்மன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் அறிக்கையால் அவர் மனமுடைந்துள்ளதாக மத்திய வங்கியின் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நாட்டின் 15 வது தலைவராக பதவியேற்றார்.
இதற்கிடையில், மத்திய வங்கியின் தலைவர் , வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களை வரவழைத்து ஒரு நிறுவனத்துக்கு அதிகபட்சமாக ரூ .25 மில்லியன் கடன்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் , இலங்கை வங்கி ரூபாய் 8 பிலியன் அளவிலான கடனை இன்று வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.