சந்தா பணத்திற்கு கணக்கு காண்பிக்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் விருப்பத்தின் பிரகாரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களிடமிருந்து சந்தா பணத்தை பெற்றுக்கொள்ளக்கூடாதென அக்கட்சியின் பிரதித் தலைவர் செந்தில் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், அமரர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்ததிலிருந்து இதுவரை செலவு செய்யப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காண்பிக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக தோட்டத்தொழிலாளி ஒருவரிடமிருந்து மாதம் 233/= ரூபாய் சந்தாப்பணம் அவர்களுடைய சம்பளத்திலிருந்து அறவிடப்படுகின்றது.
இந்தப்பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகின்றதென ஆறுமாதங்களுக்கு ஒரு தடவை தொழிலாளர்களுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பேராளர் கூட்டத்திற்கு தனக்கு உரிய முறையில் அறிவிப்பு விடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள பிரதித் தலைவர் செந்தில் தொண்டமான், அவசர அவசரமாக கூட்டப்பட்ட பேராளர் கூட்டம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.