பிரபல நடிகரும், பாடகருமான ஏ.எல்.ராகவன் மாரடைப்பால் இன்று காலமானார்
பழம்பெரும் நடிகரும், திரைப்பட பின்னணி பாடகருமான இவர், 1950-களிலிருந்து 1980 வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம். 1947-ஆம் ஆண்டில், ஏ.எல், ராகவன், கிருஷ்ண விஜயம் என்ற படத்தின் மூலம் நடிகராக திரைத்துறைக்குள் நுழைந்தார். 1950-இல் வெளிவந்த “விஜயகுமாரி” என்ற படத்தின் மூலம் அவர் பாடகராக அறிமுகமானார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம் பெற்ற எங்கிருந்தாலும் வாழ்க என்ற மிகப் பிரபலமான பாடலைப் பாடியவர் ஏ.எல்.ராகவன். இவர், எஃகோ வசதியில்லாத அக்காலத்தில் தனது குரலில் எஃகோ எஃபெக்டை கொடுத்தவர். எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்து ஆர்கெஸ்டிரா குழுவை உருவாக்கிய ஏ.எல்.ராகவன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
Comments are closed.