கொழும்பு பங்கு சந்தையின் விலைச் சுட்டெண்கள் உயர்வு

3 மாதங்களுக்கு பின்னர் கொழும்பு பங்கு சந்தையின் சகல பங்குகளின் விலைச் சுட்டெண்கள் ஐயாயிரம் அலகுகளை தாண்டியுள்ளது.
நாடு படிப்படியாக வழமைக்கு திரும்பும் நிலையில் பங்கு சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன.
நேற்றைய தினம் மொத்த விலை சுட்டெண்கள் 65 அலகுகளாக உயர்ந்திருந்தது. இது 1.3 சதவீத வளர்ச்சியாகும். மொத்த சுட்டெண்கள் 5555.57 அலகுகளாக காணப்படுகின்றது.
கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய தின மொத்த புரள்வு 1.2 பில்லியன்களை தாண்டியுள்ளது.
Comments are closed.