கோப்பாய் பகுதி வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் புதிய வீடு
கோப்பாய் பகுதியில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி பங்களிப்பில், இந்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரியவினால் இன்று கையளிக்கப்பட்டது.
காணி மற்றும் வீடு உட்பட சுமார் 25 லட்சம் பெறுமதியில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் உரிமையாளர் வாமதேவனின் நிதி பங்களிப்பில் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யாழ்மாவட்டத்தில் வீடு இன்றி வறுமையில் வாழும் குடும்பங்களின் வேண்டுகோளுக்கிணங்க, இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றாக இந்த வீட்டுத்திட்டம் வழங்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இராணுவத்தினரின் மனிதவலுவுடன் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ரூவான் வணிகசூரிய மற்றும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.வாமதேவன் உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
Comments are closed.