நிஸ்சங்க சேனாதிபதி ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்ய முடியாது
அவன்ற் கார்ட் தலைவர் நிஸ்சங்க சேனாதிபதிக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகள், அரச கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், முப்படை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காகவே ‘அரசியல் துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு” நியமிக்கப்பட்டது என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
நிஸங்க சேனாதிபதி மேற்படி எந்தவொரு பிரிவிற்கும் உட்படாதவர் என சட்ட மா அதிபர் கூறியுள்ளார்.
அவர் தொடர்பாக ஆரம்பத்தில் பாரதூரமான ஊழல் மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், இதன்போது நிஸங்க சேனாதிபதியும் அவரது நிறுவனமும் ரக்னா லங்கா நிறுவனமும் பொய் புரட்டுகளுடன் மேற்கொண்ட தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தவிர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே, நிஸங்க சேனாதிபதியின் முறைப்பாடு அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட ஒன்று எனவும், அது அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகளை அச்சுறுத்தவும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை ஆணைக்குழு என்பது தகவல்களை சேகரிக்கும் ஒன்றே தவிர, அது நீதிமன்றமல்ல என ஆணைக்குழுவிற்கு சட்ட மா அதிபர் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுப் பிரிவிற்கு எதிராக சட்ட மா அதிபர் நீதிமன்றில் கொண்டு வந்துள்ள வழிமுறைகளை வினவவோ, விசாரணை நடத்தவோ ஆணைக்குழு முற்படுகின்றமை நீதிமன்ற செயற்பாட்டில் தலையீடு செய்வதாகவே அமையும் என சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.