சுகாதார அமைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை : சுகாதார பரிசோதகர்கள் கடமையில் இருந்து ஒதுங்க உத்தேசம் ?
சுகாதார ஆய்வாளர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், கொரோனா கடமைகள், தேர்தல் கடமைகள் மற்றும் டெங்கு ஒழிப்பு கடமைகள் ஆகியவற்றிலிருந்து எதிர்வரும் திங்கள்கிழமை (29) முதல் வாபஸ் பெற உள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் அதிகாரிகளுடன் 6 சந்தர்ப்பங்களில் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மீறியுள்ளதாக தொழிற்சங்கம் கூறுகிறது.
தனிமைப்படுத்தல், தொடர்பு முன்பதிவு, தொற்று நோய்கள் சட்டத்தின் ஆய்வாளர்களை நியமித்தல், பொது சுகாதார ஆய்வாளர்கள் தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற கோரிக்கைகளுக்கு அரசு இணங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனா தெரிவித்துள்ளார்.
Comments are closed.