இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான நடராஜசிவம் காலமானார்

மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான எஸ். நடராஜசிவம், நேற்று (24) மாலை, கொழும்பில் காலமானார்.
எஸ். நடராஜசிவம் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவராகவும். திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகருமாக பணியாற்றினார். அண்மைக் காலம் வரை தனியார் வானொலி நிலையமான சூரியன் F.M வானொலியில் முதன்மை முகாமையாளராக பணியாற்றி வந்தார்.
ரூபவாகினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப் பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய ‘கற்பனைகள் கலைவதில்லை’ என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர்.
Comments are closed.