கருணாவினால் எந்தப் பயனும் எமக்கு இருந்ததில்லை – சரத் பொன்சேகா
கருணா அம்மான் அரசாங்கத்திடம் சரணடைந்தபோது, அவர் இராணுவத்திற்காக எந்த உதவியும் செய்யவில்லை, மேலும் அவர் புதுகுடியிருப்பு உட்பட வடக்கில் பல இடங்களில் வாழ்ந்துஇருந்தாலும் , அவர் பிரபாகரனின் வசிப்பிடத்தினைக் கூட வெளிப்படுத்தவில்லை என்று முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
“கருணா சரணடைந்திருந்தாலும், போரில் ஈடுபட்டபோது நாங்கள் அவரைப் பயன்படுத்தவில்லை. அவர் புதுக்குடியிருப்பு உட்பட வடக்கில் எல்லா இடங்களிலும் பிரபாகரனுடன் இருந்தார். ஆனால் அவர் பிரபாகரனின் வசிப்பிடத்தின் இருப்பிடத்தை கூட வெளிப்படுத்தவில்லை. அந்த தகவலை நாங்களே பின்னர் மீட்டெடுத்தோம்.
அவருடன் சரணடைந்த சுமார் 150 நபர்களில் 80 பேர் 13 வயதுக்குக் குறைவான வயதுடையவர்கள். அவர்களிடம் போர் ஆற்றல் இல்லை.அவர் இராணுவத்திற்கு வலிமை அளிக்கும் சூழ்நிலையிலும் இல்லை. இப்போது, அதே கருணா அம்மான் இத்தகைய அறிக்கைகளை வெளியிடுகிறார். அவருக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும், ”என்று முன்னாள் இராணுவத் தளபதி நேற்று (24) நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Comments are closed.