மூத்த அறிவிப்பாளரும் நடிகருமான நடராஜசிவம் காலமானார் ; இறுதி கிரிகை இன்று
மூத்த அறிவிப்பாளரும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகருமான நடராஜா சிவம் காலமானார். கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறக்கும் போது அவருக்கு 74 வயது.
தேசிய ரூபாவாஹினி மற்றும் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் பிரிவின் அறிவிப்பாளரான சின்னையா நடராஜசிவம், தேசிய ரூபாவாஹினியில் ஒளிபரப்பப்படும் ‘ஆயூபோவன்’ (வணக்கம்) உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்களித்துள்ளார்.
ஒலி – ஒளிபரப்பு துறைகளில் தமிழ் செய்தி தொகுப்பாளராக பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். ஆசிய ஊடக வலையமைப்பான சூரியன் எஃப்.எம் நிறுவனத்தின் நிறுவன திட்ட மேலாளர் மற்றும் ஆலோசகராகவும் இருந்து உள்ளார்.
தொலைக் காட்சி மற்றும் திரைப்பட நடிகருமான நடராஜசிவம் போர்க்காலங்களில் ஒளிபரப்பான தொலைக் காட்சி தொடர்களில் சகவாழ்வை சித்தரிக்கும் பல வேடங்களில் நடித்துள்ளார்.
அவரது சில படங்கள் ‘சுது அக்கா’ (1997), ‘யுத கிணி மெத ‘ (1998), ‘ இர ஹந்த யட்ட ‘ (2010) மற்றும் ‘செல்வம்’ (2011) ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடக் கூடியவையாகும்.
‘லா ஹிரு தஹசக் ‘ உட்பட பல தொலைக் காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.
மறைந்த நடராஜாசிவம் அவர்களது இறுதிச் சடங்குகள் இன்று (25) பிற்பகல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
Comments are closed.