19 ஐ நீக்கி பொருத்தமான அரசியலமைப்பு ஒன்றிற்காகவே 3/2 – சுசில் பிரேம் ஜயந்த்
19 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நாட்டில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதனை நீக்கி நாட்டிற்கு பொருத்தமான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காகவே 3/2 – பெரும்பான்மை பலத்தை நாட்டு மக்களிடம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீ பொதுஜன முன்னணியின் வேட்பாளர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றுத்துறையை பலவீனப்படுத்துவதற்காகவே 19 வது திருத்த சட்டம் சூட்சுமான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசியலில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதாகவும் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியே பல தசாப்தங்களாக கொழும்பு மாவட்டத்தில் ஆட்சி புரிந்து வருவதனை சஜித் பிரேமதாஸ அவர்கள் மறந்து செயல்பட்டு வருவதாகவும் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.
Comments are closed.