இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் வேகம் அதிகம் – மத்திய சுகாதாரத்துறை
இன்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 490,401 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார தரப்பு, 407 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்மூலம் கொரோனா வைரசினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ள அதேவேளை மரண விகிதம் 3.1 என குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 285,637 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதுடன் அதன் விகதம் 58.2 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகளவான தொற்றுள்ளவர்களாக மகாராஷ்டிர மாநிலம் பதிவாகியுள்ளது.
இங்கு 147,741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 70,977 பேருக்கும், டெல்லியில் 73,780 பேருக்கும், குஜராத்தில் 29520 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.