ஊழலற்ற மக்களுக்கான சேவை வடக்குக்கு தேவை : வேலாயுதம் கணேஸ்வரன்
வடக்கு மக்களது அடிப்படை பிரச்சனை குறித்து பேச தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளரான வேலாயுதம் கணேஸ்வரன் யாழ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.
300 கோடி ரூபா இரணைமடு குடி நீர் திட்டம் கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தடைபெற்றுள்ளது. அதை விசாரித்த ஆணைக் குழுவின் அறிக்கையைக் கூட முன்னாள் யாழ். ஆளுனர் சுரேன் ராகவன் மறைத்துவிட்டார் என குற்றம் சாட்டிய அவர் நெல்சிப் ஊழல் விசாரணை கூட 7 வருடங்களாக கிடப்பில் இருக்கிறது என தெரிவித்தார்.
தென் இலங்கை சுற்று சூழலியியலாளர் ஒருவர் வந்து விசாரித்து அறிக்கை விடும் வரை வலிகாமம் வடக்கு குடி தண்ணீர் கழிவு விவகாரம் குறித்து பொய் அறிக்கைகளை தயாரித்து மக்களை வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் உட்பட அவரோடு இருந்தோர் ஏமாற்றினர் என்றார்.
தம்மை மக்கள் இம்முறை தேர்தலில் தேர்வு செய்தால் மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் பெற்றுக் கொடுப்பதே தனது கனவு என டெலிபோன் சின்னத்தில் களம் இறங்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளரான வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்தார்.
Comments are closed.