UNP தலைமைக்கான போராட்டம் ஆரம்பம் : 5 பேர் களத்தில் : ஆறாவது நபர் அமைதி
ரனில் விக்கிரமசிங்கவுக்கு பின்னர் ஐதேகவின் தலைமைத்துவத்திற்கான போராட்டத்தில் பகிரங்கமாக ஐவர் களத்தில் இறங்கியுள்ளனர்.
ரவி கருணநாயக்க, நவீன் திசாநாயக்க, அகிலா விராஜ் காரியவாசம், சாகலா ரத்நாயக்க, தயா தர்மபால கமகே ஆகியோர் ஐதேகவின் அடுத்த தலைமைக்கான போட்டியில் நேரடியாக இறங்கியுள்ளனர். அதன் ஆரம்ப கட்டமாக சஜித் பிரேமதாசவிடமிருந்து அகற்றப்பட்ட பிரதி தலைவர் பதவியை பெறும் முயற்சி நடக்கிறது.
இதற்கிடையில், விஜேவர்தன-விக்கிரமசிங்க பரம்பரை வாரிசான ஐதேக தலைவராக ஆகக்கூடிய ருவான் விஜேவர்தன இன்னும் அமைதியான கொள்கையை பின்பற்றி வருவதாக தெரிகிறது.
2019 கட்சி மாநாட்டின் கடைசி தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் 2023 ஆம் ஆண்டு வரை கட்சியின் தலைமையில் நீடிக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Comments are closed.