6வது உலக யோகா தினத்தை யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் கொண்டாடியது
6வது உலக யோகா தினத்தை யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து கிளிநொச்சி மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் இன்று (28)கொண்டாடியது.
மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லத் தலைவர் திரு பொன் நித்தியானந்தம் தலைமையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோதியின் செய்தி மற்றும் ” ஸ்பிரிட் ஓப் யோகா ” என்ற காணொளியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வில் யாழ்.இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை ஆற்றியதுடன், யோகா பயிற்றுனர் சூரியகுமார் அவர்கள் யோகாசன பயிற்சிகளை வழிநடாத்த, இல்லத்தில் இருந்து 50 மாணவர்களும் இல்லத்தின் பணியாளர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிகழ்வில் பங்குபெற்றி சிறப்பித்தனர்.
இதன்போது தூதரகத்தின் சார்பில் நடத்தப்பட்ட யோகா சம்பந்தமான கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் இல்ல மாணவர்களுக்கு
செல்வன் ச.பிரசன்னா முதலாவது பரிசு ரூபா.4, 000
செல்வி சி.பிரியனி இரண்டாவது பரிசு ரூபா.2, 000
செல்வி ம.தர்சினி மூன்றாவது பரிசு ரூபா.1,500
பண பரிசில்களும் வழங்கப்பட்டன .
அத்துடன் மேற்படி போட்டிகளில் பங்குபெற்ற ஏனைய அனைவருக்கும் ஆறுதல் பரிசாக தலா ரூபா 1,000 பணப்பரிசாக வழங்கப்பட்டதுடன் நிகழ்வின் நிறைவாக மகாதேவ சுவாமிகள் இல்ல நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செல்வி தயந்தினி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
மேலும் உலக யோகா தினத்தை (21) முன்னிட்டு தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான மகளிர் இல்லத்துடன் இணைந்து கடந்த 24ஆம் திகதி நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.