தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (30) முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் ஆணைக்குழுவின் மேலும் சில உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
எனினும் அது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.
Comments are closed.