எதிரியின் சடலத்தை கௌரவமாக கையளித்த புலிகள் சக போராளிகளை சுட்டிருக்க மாட்டார்கள்- அனந்தி
பொருளாதார தடைகள் நிறைந்த காலத்தில் கூட யுத்தத்தில் உயிரிழந்த எதிரியின் சடலத்தை மிகவும் கௌரவமான முறையில் கையளித்த விடுதலைப் புலிகள் எவ்வாறு தங்களின் படையில் இருந்த சக போராளிகளை சுட்டு புதைத்திருக்க முடியும் என ஈழ தமிழர் சுயாட்சி கழக செயலாளர் நாயகமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வெட்பாளருமாகிய அனந்தி சசிதரன் கேள்வி யெழுப்பியுள்ளார். .
மல்லாகம், புலமன்கால் பகுதியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் .
தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு மாற்றாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டதனாலும் உட்கட்சி ஜனநாயகம் இல்லாதா காராணத்தினாலும், மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கியமையாலும், அரசின் மறைமுகமான மறைமுகமான நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டதனாலும் நாம் மாற்று அணியாக களமிறங்கி இருக்கின்றோம். எமது கூட்டணியில் உள்ள பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலக்கியவர்களே. அந்த தவறை எமது கூட்ட்டணி செய்யாது என நாம் நம்புகிறோம்.
எனது கணவரை இராணுவத்தினரிடம் கையளித்து விட்டு அவரை மீட்பதற்காக தனி மனிதனாக நான் போராடினேன். அனால் 2013ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் 88 000 வாக்குகளை நான் பெற்ற போது சர்வதேசம் என் பக்கம் திரும்பியது. அதற்கு காரணம் ஒரு பாதிப்பின் வெளிப்பாடாக நான் பார்க்கப்பட்டேன்.
மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட போது என் கணவரைப் போன்று சரணடைந்த பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் உண்மையை கூட்டமைப்பினர் கண்டறிவார்கள் என நான் நம்பினேன். அனால் நாட்கள் செல்லவே எமக்கு உண்மை புரிந்தது கூட்டமைப்பினர் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டு தருகின்ற நிலையில் இல்லை என்று.
எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும், இறுதி யுத்தத்தில் நிகழ்ந்தது இன அழிப்பு என் என நான் பேசிய போதெல்லாம் எனக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. அனாலும் நான் சர்வதேச விசாரணை வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என தொடர்ந்தும் போராடி வருகின்றேன்.
சர்வேந்திர சில்வாக்கு எதிராக நான் 2012ம் ஆண்டு ஆட்கொணர்வு மணு ஒன்றை தாக்கல் செய்திருந்தேன். அவர் இன்று வரை அவ் வழக்கில் பிரசண்ணமாகவில்லை. அனால் இன்று அவர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப் பட்டிருக்கலாம் என்று கூறி இருக்கிறார். இது ஒரு ஏற்று கொள்ள முடியாத ஒரு கருத்தாகும். இது முழு பூசணிக்காயை சோற்றில் போட்டு மறைப்பதாற்கு ஒப்பானது.
யுத்தத்தில் உயிரிழந்த எதிரியின் சடலத்தை கூட மிகவும் கௌரவமான முறையில் விடுதலைப் புலிகள் கையளித்தனர். அவ்வறானவர்கள் எவ்வாறு தங்களின் படையில் இருந்த சக போராளிகளை சுட்டு புதைத்திருக்க முடியும். அப்படியான சம்பவங்கள் எதுவும் நடந்திருக்காது
இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் நிராயுத பாணியாகவே எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தோம். அவ்வாறு இருக்கையில் அவர்கள் போரில் இறந்திருக்கலாம் என இராணுவத் தளபதி அதிகார மமதையில் கூறுவதை எவ்வாறு நாம் ஏற்ப்பது, என்றார் .
Comments are closed.