இந்தியாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்த முடிவால் சீனா கவலை
சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளமை மிகுந்த கவவையளிப்பதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார்.
இந்தியா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடனான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்களிடம், சர்வதேச சட்ட திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து நடக்குமாறு சீன அரசு எப்போதும் வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுபோன்ற சீன நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களின் சட்டரீதியான உரிமைகளை உறுதி செய்வது இந்தியாவின் கடமையெனவும் சீன வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா – சீனா இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு, இருதரப்புக்குமே நல்லதென தெரிவித்துள்ள லிஜியன், இதனை செயற்கையாக சீர்குலைப்பது இந்தியாவின் நலனுக்கு ஏற்றதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.