தொண்டமானின் வேவண்டன் இல்லத்தில் தீவிபத்தா?

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை தவலந்தண்ண வேவண்டன்
தோட்டத்தில் தொழிற்சாலை பிரிவிலுள்ள லயன் குடியிருப்பில் மின் ஒழுக்கின்
காரணமாக ஏற்பட்டத் தீவிபத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.
திங்கட்கிழமை(01) இரவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து பிரதேச மக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தனர்.
தீ விபத்து தொடர்பில் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன்
குமாரவேல் தொண்டமான் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளரும் ஊவா
மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் சம்பவ
இடத்துக்குச் சென்றுள்ளனர்.
இதேவேளை இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான
நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர். மேலும்
அங்கு தேவையான மருத்துவ உதவிகளையும் பெற்று கொடுத்தனர். சேத
மதிப்பீடுகளை மேற்கொள்ள மனித வள அபிவிருத்தி நிதியத்தின் உதவியும்
பெற்றுக்கொள்ளப்பட்டது.
இத் தீ விபத்து தொடர்பாக இலங்கை மின்சார சபை பொறியியலாளருக்கும்
தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தீ விபத்து தொடர்பிலான மேலதிக
விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இல்லமும் வெவண்டன்
தோட்டத்தில் இருக்கிறது. இந்த வெவண்டன் இல்லத்தில் இந்த தீவிபத்து
இல்லை. வெவண்டன் தோட்டத்திலேயே தீவிபத்து ஏற்பட்டிருப்பதாகவும்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் கூறினார்.
– தலவாக்கலை பி.கேதீஸ்
Comments are closed.