ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் 3 மணி நேர விசாரணை

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுப்பிரிவினர், மத்திய வங்கியின் பினைமுறி மோசடி குறித்து 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த வாக்குமூலம், அவருடைய வீட்டில் வைத்து பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரின் ஆலோசகராக சேவையாற்றிய ஆர். பாஸ்கரலிங்கம், மத்திய வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் வசந்தகுமார் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நான்கு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேறா பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடந்த மாதம் 18 ஆம் திகதி ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.