அன்று கூட்டமைப்பு தலைவர்களை கொல்லாததை எண்ணி வருந்துகிறேன் : கருணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அன்று கொல்லாமல் விட்டது தவறு என்று கருணா அம்மன் அல்லது விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைக் கொல்லாததற்கு வருத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு களவாஞ்சிகுடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசும் போதே இதை தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தராக்கி சிவராமால் உருவாக்கப்பட்டது எனவும் தானே பிரபாகரனிடம் அவர்களை அழைத்துச் சென்றேன் என்றும், ஆரம்பத்தில் கொல்ல வேண்டியவர்களை ஏன் என்னிடம் அழைத்து வருகிறாய் என பிரபாகரன் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை தான் அழைத்துச் சென்ற போது கூட்டமைப்பின் தலைவராக ஆர்.சம்பந்தன் இருக்கட்டும் என பிரபாகரன் சொன்னார் என மேலும் தெரிவித்துள்ளார்.
வீடியோ:
Comments are closed.