மாட்டுடன் கார் மோதியதில் விபத்து

வவுனியா – புளியங்குளம் சன்னாசிப்பரந்தன் பகுதியில் மாட்டுடன் மோதிய கார் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
இன்றயதினம் (04) காலை10 மணியளவில் முல்லைத்தீவிலுருந்து வவுனியா நோக்கி வருகைதந்த கார் வீதியின் எதிரே சென்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் குறித்த கார் கடுமையான சேதமடைந்த நிலையில் அதன் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார். மாட்டிற்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
Comments are closed.