எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார் – சம்பந்தன்
எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகாேணமலையில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
“சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு நாட்களில் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடினார்.
அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு சென்றபோது இந்தச் செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது” – என்றார்.
Comments are closed.