இளம் கிரிக்கெட் வீரர் குசல்மென்டிஸ் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை, ஹொரேத்துட்டுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.