வடக்கில் போலீஸ் – அதிரடிப்படை மற்றும் இராணுவம் சுற்றி வளைத்து சோதனை !

விடுதலைப் புலிகளது கரும் புலிகள் தினமான நேற்று முன் தினம் (5) சமூக விரோதச் செயல்களில் ஈடுபட சிலர் தயாராகி வருவதாக கிடைத்த தகவலொன்றை அடுத்து கிளிநொச்சி கண்டாவளைப் பகுதி உட்பட பல பகுதிகளில் போலீஸ் – அதிரடிப்படை மற்றும் இராணுவம் அதிரடி தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.

கண்டாவளை தர்மபுரம் போன்ற பிரதேசங்களில் 400 வீடகளுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் தேர்தல் காரியாலயங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது சந்தேகத்தின் பேரில் பேரில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவர்களது சோதனை நடவடிக்கையின் போது ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது ஈடுபட பின்னணியில் செயல்படுவோரை உடனடியாக கைது செய்ய விசேட சோதனைகள் நடைபெறலாம் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல யாழ். திருநெல்வேலி பாலாலி வீதி தேர்தல் காரியாலயம் ஒன்றுக்குள் புகுந்த 20க்கு மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளர். மேல் மட்டத்திலிருந்து கிடைத்த ஒரு ஆணையின்படி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக காவல்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.


Comments are closed.