செலுத்த வேண்டிய கடன்கள் 5 ஆயிரம் மில்லியன் டொலர்கள் – UNP தலைவர்
இந்த வருடத்தில் 5 ஆயிரம் மில்லியன் டொலர்கள் கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவல் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கடன் பெறுமதியினை மீள்செலுத்துவதற்காக அதற்கான நிதியை திரட்ட முடியுமெனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான நிவாரணங்களை ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே வழங்கமுடியுமெனவும் ரணில் விக்ரமசிங்க இதன் போது மேலும் தெரிவித்தார்.
பெறப்பட்டுள்ள கடன்களை மீள் செலுத்துவதற்கான நிதியை திரட்டி மக்களுக்கு நிவாரணம் வழங்க கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு மறை பெருமானத்தில் பொருளாதாரம் சென்ற போது அதனை ஒரே வருடத்தில் நேர் பெருமானமாக மாற்றியதனையும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் அனைத்தும் வீழ்ந்துவிட்டதாக அனைவரும் கூறிவந்த நிலையில் தான் சென்று நிவாரணங்களை பெற்றுக் கொண்டு வந்ததாக ரணில் விக்ரமசிங்க நினைவூட்டியுள்ளார்.
Comments are closed.