பாலித்த தெவரப்பெரும அரசியலை விட்டு ஒதுங்குகிறார்?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளருமான பாலித தெவரபெரும தனது விலகல் அறிவிப்பு குறித்து கூறுகையில், காவல்துறை உட்பட பல தரப்பினரால் அவர் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களால் அவரது மனைவியும் மகனும் பாதிக்கப்படுவதால் தான் அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் வேட்புமனுவிலிருந்து தனது பெயரை அகற்றிக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இறந்த தனது மகனுக்கா தானம் கொடுக்க வைத்த மகனது படத்தை தாங்கிய பலகையை அகற்ற மத்துகம போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்று தனது மனைவியை கீழே தள்ளி வீழ்த்திவிட்டதாக தெவரப்பெருமா கூறினார்.
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஒப்படைத்த பின்னர் பல்வேறு கட்சிகளால் தான் துன்புறுத்தப்படுவதாக அவர் கூறினார்.
அவர் தனது மனைவி மற்றும் மகனுக்காக அரசியலை விட்டு வெளியேறத் தயாராக உள்ளதாகவும், ஏற்கனவே ஐதேகவின் சட்ட செயலாளருக்கு அது குறித்து அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் ஐதேகவின் வேட்புமனுவிலிருந்து விலக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெவரப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.
அவரது மனைவி தற்போது நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments are closed.