போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட போலீசார் , ஜனாதிபதியிடம் விருதுகளையும் பெற்றுள்ளார்கள்
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் இணைந்து நாட்டிற்குள் போதைப்பொருட்களை கொண்டு வந்து , அவர்களே அவற்றை பாதுகாப்பான வீடுகளில் வைத்து பொதி செய்து விநியோகித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று (8) கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன முன் இது குறித்த விளக்கத்தை விபரித்தார்.
இந்த கும்பல்கள் போதை பொருட்களை வெளியே விற்றதுடன் , மீண்டும் சோதனை நடத்தி அவற்றைக் கைப்பற்றி அரசாங்கத்திடமிருந்து லட்சக் கணக்கான பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான சொத்துக்களை வாங்கியுள்ளதாகவும், இந்த சந்தேக நபர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் இருந்து போதைப்பொருள் சோதனைகளுக்காக ஜனாதிபதி விருதுகளைக் கூட பெற்றுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிய வந்துள்ளது.
மேலும், சந்தேக நபர்கள் போலி பணம் அச்சிடும் மோசடியிலும் ஈடுபட்டார்களா என்பது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.
Comments are closed.