ஆடி அமாவசை தினத்தில் கடலோரத்தில் பிதிர்க்கடன் செய்யலாம்
ஆடி அமாவாசை பிதிர்க்கடனை நிறைவேற்ற அமைச்சர் டக்ளஸ் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் குளங்கள் மற்றும் கடலோரங்களில் பிதிர்க் கடனை செய்வதற்கு சுகாதார தரப்பினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதையடுத்து குளங்கள் குறுகிய பரப்பை கொண்டுள்ளதால் கொரோனா தொற்று பரவும் சாத்தியம் அங்கு அதிகமாக இருப்பதால் அதற்கு பதிலாக கடலோரங்களில் அத்தகைய கிரியைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.