இன்று முதல் தபால் மூல வாக்கு பதிவு
இன்றைய தினம் முதல் எதிர்வரும் 17, 20 மற்றும் 21 ஆம் திகதி வரை தபால் மூல வாக்குபதிவுகள் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கென 7 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களிலுள்ள அதிகாரிகளுக்கு மாத்திரம் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படை முகாம்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார தரப்பினர், சகல மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் அலுவலகங்கள் தவிர ஏனைய அரச நிறுவனங்களில் எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.
எதிர்வரும் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் பொலிஸார் பாதுகாப்பு படையினர் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், சுகாதார தரப்பினர், மாவட்ட செயலக அதிகாரிகள், தேர்தல்கள் செயலக அதிகாரிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
மேற்குறிப்பிடப்பட்ட தினங்களில் வாக்குகளை பதிவு செய்ய தவறினால் எதிர்வரும் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் வாக்குகளை பதிவு செய்ய முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எப்பிரச்சினை இடம்பெற்றாலும் தேர்தல் குறித்த திகதியில் நடைபெறுவதில் எந்த மாற்றமும் ஏற்படாதென தேர்தர்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Comments are closed.