ஐ.தே.கட்சியினால் கைவிடப்பட்ட பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
ஐக்கிய தேசிய கட்சியினால் கைவிடப்பட்ட பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாஹரகமவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணில் போட்டியிடும் வேட்பார்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ள முடியாத வகையில் அரச ஊழியர்களுக்கு யாப்பு ரீதியான பாதுகாப்பை வழங்கப்போவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரச ஊழியர்கள் இழந்த அனைத்து உரிமைகளையும் தற்போதைய அரசாங்கம் பெற்று தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
1983 ஆம் ஆண்டு ஜூலை வேலை நிறுத்தத்தினால் 40 ஆயிரம் பேரை இரவோடு இரவாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே அனுப்பி வைத்ததனையும் பிரதமர் இதன் போது நினைவூட்டினார்.
சுமார் 7 இலட்சம் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 15 இலட்சமாக அதிகரிக்க செய்து அரச சேவையை பலப்படுத்தியது தமது அரசாங்கம் மட்டுமே எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Comments are closed.