தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட ஊடகவியலாளருக்கு கொரோனாவா?
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்குகளின்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மலையக ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என டிக்கோயா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு டிக்கோயா வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவரை தொடர்புக் கொண்டு வினவிய போது “குறித்த ஊடகவியலார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு வந்திருந்தார். அவருக்குப் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எமது வைத்தியசாலைகளில் வாரத்துக்கு 5 PCR பரிசோதனைகளை செய்ய முடியும்.
குறித்த ஊடகவியலாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக இதுவரையில் உறுதிபடுத்தவில்லை. பரிசோதனைகளின் முடிவு வெளியானதுமே அதனை உறுதி செய்ய முடியும்” என அந்த வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
குறித்த ஊடகவியலாளருடன் தொடர்புகளை வைத்திருந்த இருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். எனினும் சற்றுமுன்னர் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதாக எமது செய்தி சேவைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
Comments are closed.