பொதுத்தேர்தலை பிற்போடுங்கள் – சஜித் பிரேமதாச
கொவிட் – 19 இன் இரண்டாம் கட்ட அலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டின் நிலைமையினை கருத்திற் கொண்டு பொதுத் தேர்தலை பிற்போடப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுத்தேர்தலை உரிய திகதியில் நடத்துவது தொடர்பாக பரவாலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் கொவிட் – 19 வைரஸின் தாக்கம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டு கடுவலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments are closed.