முன்னாள் இராணுவ அதிகாரி யாழில் முடி காணிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கும் முப்படை மற்றும் பொலிஸார் உட்பட சுகாதார சேவையினருக்கு தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க இறைவனை வேண்டி 108 நாள்கள் விரதமிருந்த 81 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவர், தனது நேர்த்தியை நிறைவு செய்யும் வகையில் தலை முடியை காணிக்கை செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி நடராசா என்ற 81 வயது முதியவரே இந் நெகிழ்ச்சியான செயலைப் புரிந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, கோரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி இந்த ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர், நேர்த்தி வைத்து, 108 நாள்கள் விரதம் இருந்து தனது தலைமுடி மற்றும் தாடியை இறக்கியுள்ளார்.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், முதியவரின் செயல் குறித்து பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன
Comments are closed.