தேர்தலை பிற்போடுமாறு சஜித் அவசர கோரிக்கை

அரசாங்கம் மக்கள் நலன் பற்றி சிந்தித்தால் உடனடியாக தேர்தலை பிற்போட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலை அறிவித்து பிரச்சார கூட்டங்களுக்கு கட்டுப்பாடு நிபந்தனை விதிப்பது ஜனநாயக செயலாக அமையாதென அத்துருகிரியவில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் சஜித் தெரிவித்தார்.
மீண்டும் கொரோனா தொற்று பரவல் தொடர்பான புள்ளி விபரங்கள் அனைத்தையும் ஆளும்கட்சி தரப்பே வெளியிடுவதாகவும் இந்த தகவல்களின் வெளிப்படை தன்மை குறித்து சந்தேகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நடத்துவதாக அறிவித்த பின்னர் நிபந்தனைகளை விதிக்க தேர்தல் ஆணைக்குழு உட்பட எவருக்கும் தார்மீக உரிமையில்லை எனவும் நிபந்தனைகளை விதிப்பதால் எதிர்க்கட்சிகளுக்கே பாதிப்பு ஏற்படும் எனவும் இது ஜனநாயகம் அல்ல எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.