கொரோனா சமூகத்தில் பரவ வாய்ப்புள்ளதனால் அவதானமாக செயல்படுங்கள் – மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர
கந்தக்காடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் மூலம் வைரஸ் சமூகத்தில் பரவ வாய்ப்பிருப்பிருப்பதாக தொற்று நோய் மருத்துவ பிரிவின் பொறுப்பாளரும் மருத்துவ நிபுணருமான சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்காக விசேட அவதான நடவடிக்கைகள் நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவ நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பயணங்களை வரையறுத்துக்கொள்வதுடன் அத்தியாவசிய காரணங்கள் தவிர்ந்த இதர தேவைகளுக்காக வெளியில் செல்வதனை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் சுகாதார தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெளியில் செல்லும் அனைவரும் முகக்கவசத்தை அணிந்து சமூக இடைவெளியை பேணுவதுடன், கைகளை கூடியவரை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டுமெனவும் சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவளை வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு வரவழைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு தொடர்பிலான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
Comments are closed.