யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடைப்படும்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(16) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.நெடுங்குளம், மணியந் தோட்டம், ஹெலன் தோட்டம், உதயபுரம், Infantas Ice Solutions பிறைவேற் லிமிற்ரெட், கொழும்புத்துறை வீதி, AV வீதி, துண்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.