சஜித் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவுக் கூட்டம் பிரான்ஸ் பாரீசில் நடைபெற்றது

கடந்த 12ம் திகதி சஜித் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான ஆதரவு கூட்டம் பாரீசில் நடைபெற்றது. கோவிட் பிரச்சனையையும் பொருட்படுத்தாது ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
அக் கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பாரீஸ் கிளை ஒழுங்கு செய்திருந்தது. அங்கு குழுமியிருந்தோரோடு இணைய வழி நேரலை ஊடாக இலங்கையில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச , பொது செயலாளர் ரஞ்ஜித் மத்தும பன்டார, விஜித முனி சொய்சா, மரிக்கார், அஜித் .பி. பெரேரா ,திஸ்ச அத்தநாயக்க மற்றும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஷ் வேலாயுதம் ஆகியோர் உரையாற்றினர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச “எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. புலம்பெயர் இலங்கை மக்களின் இவ்வாறான செயற்பாடுகள் எமக்கு பலமாக இருக்கிறது. நாம் இம்முறை ஆட்சிக்கு வந்த பின் உங்களின் எதிர்பார்ப்புக்கு உண்மையாக செயற்படுவோம். உங்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்தும் எமக்கு கிடைக்கவேண்டும். மக்கள் நலன் சாராது செயற்படுகின்ற இந்த அரசை அகற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவேம் . நாம் அமைக்கின்ற அரசாங்கம் வறிய மக்களின் வாழ்வில் நலம் பெற செயற்படும் என நான் உறுதி கூறுகிறேன். அத்தோடு புலம்பெயர் இலங்கையர்கான இருப்பு நலன் சார்பில் எம்மால் விசேட கவனம் எடுக்கப்படும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கலந்த வணக்கங்கள்” என்று கூறினார்.
கணேஸ் வேலாயுதம் தமக்கான ஆதரவை உறவுகளிடம் பெற்று தருமாறும் , வடக்கில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புலம் பெயர் மக்களின் நேரடி பங்களிப்பை நாட்டுக்கு வந்து செய்யுமாறும் வேண்டிக் கொண்டார். அவரது காணோளி ஒன்றும் அங்கு திரையிடப்பட்டது.
அன்றைய நிகழ்வில் குலேட் நாலக தேவேந்திர, அஜீத் ரணசிங்க , ரணவி பன்டார மற்றும் சுப்ரமணியம் சரவணா ஆகியோர் கலந்து கொண்டு கட்சி எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியதோடு கலந்துரையாடல்களையும் நடத்தினர்.
படங்கள் மற்றும் காணோளி :
யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஷ் வேலாயுதம் அவர்களது வீடியோ …
Comments are closed.