சிறீதரனுக்கு சிலை வைப்பேன் – ஆனந்தசங்கரி
2004ம் ஆண்டு நடந்த ஜனநாயக மீறலை அப்படியே சுட்டிக்காட்டியதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு சிலை வைப்பேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.
இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வீ.ஆனந்தசங்கரியிடம் ஊடகவியலாளர்கள், தான் 75 கள்ள வாக்குகள் போட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்
தெரிவித்த கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்அவர் மேலும் தெரிவிக்கையில், சிவஞானம் சிறிதரனுக்கு நான் பூப்போட்டு கும்பிடலாம் என இருக்கின்றேன்.
கொஞ்சம் சொல்லிவிட்டார் மிகுதியையும் சொன்னால் நல்லம். சம்பந்தர் கள்ள வாக்கு போடவில்லையா? மாவை சேனாதிராஜா போடவில்லையா? அவர் சொன்ன அதே தேர்தலில் 2004 ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜா காலையில் தோற்று மாலையில் எம்பியாக வரவில்லையா?
அனைத்து விடயங்களையும் சீறிதரன் சொன்னால் நான் போட்டி இல்லாமல் அவரை எம்பியாக ஆக்குவேன். சிறிதரனுக்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் 2004 ஆம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது சம்பந்தரும், சேனாதிராஜாவும்.
அந்த காலத்தில் சீறிதரன் சின்ன பெடியன் பேசாமல் இருந்துவிட்டு இப்போ புத்தி வந்து விடயத்தை சொல்லுகிறார். மீதமுள்ள விடையத்தையும் சொன்னால் என் மனது சந்தோசமடையும்.2004 ஆம் ஆண்டு தடம்புரன்ட ஜனநாயகம் இன்னும் திரும்பி வரவில்லை.
அந்த ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை சீறிதரனை சாரும் நான் அவருக்கு சிலை வைப்பேன் என தெரிவித்துள்ளார்.
Comments are closed.