யாழ் இந்து சாரணர்களினால் கொண்டாடப்பட்ட ஆடிப்பிறப்பு தினநிகழ்வு

யாழ் இந்துக்கல்லூரி சாரணர்களினால் ஆடிப் பிறப்பு தின நிகழ்வு மிக எளிமையாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கொண்டாடப்பட்டது.
நிகழ்வானது கல்லூரி முதல்வரின் வழிப்படுத்தலில் குழுச் சாரணியப் பொறுப்பாசிரியர் திரு. க.சுவாமிநாதன் நெறிப்படுத்துகையில் துருப்பு தலைவன் செல்வன் சி பிரவீணன் தலைமையில் நிகழ்வுகள் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் கோயில் முன்றலில் நடைபெற்றது.
முதலில் கோயில் பூசையுடன் ஆரம்பமான நிகழ்வு பின்னர் ஆலய பிரதம குரு நிறைஞ்சன் சர்மாவின் வாழ்த்துடன் கல்லூரி பிரதி அதிபர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் கல்லூரியில் சாரணர் செயற்பாடு பற்றி பல எடுத்துக் காட்டுடன் கூறி இருந்தார் .அதற்கு அடுத்ததாக குழுச் சாரணியப் பொறுப்பாசிரியர் “எமது வாழ்க்கை முறையும் சமயமும் ” எனும் விடயத்தில் உரையாற்றினார். அதன் பின் மிகச் சிறிய அளவில் ஆடிக்கூழ் காய்ச்சி குடித்து மகிழ்ந்தனர்.
Comments are closed.