மலையகத்தில் தொடர்கிறது குளவிகள் அட்டகாசம்

தோட்டத் தொழிற்றுறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதனால், 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொட்டகலை பொரஸ்கிறிக் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட 10 பேரும் பெண்களாவர்.
Comments are closed.