அரசியலமைப்பை மாற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை – வாசு
நாட்டின் அரசியலமைப்பை மாற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவா நானாயக்காரா தெரிவித்துள்ளார்.
அதை செய்வதற்கு ஆட்சியமைப்பதற்கான ஓரளவு பெரும்பான்மை ஆணையே போதுமானது என்றும் தேவைப்பட்டால் புதிய அரசியலமைப்பிற்கு சட்டப்பூர்வ உரிமை இருக்கிறதா என்று பார்க்க பின்னர் மக்கள் கருத்து கணிப்பு ஒன்றுக்கு செல்லாம் என்றும் வாசுதேவ நானாயக்கார தெரிவித்துள்ளார்.
அன்றைய ஜெயவர்த்தன தயாரித்த அரசியலமைப்பை கொண்டு நாட்டின் எதிர்காலத்தை சிறையில் அடைக்க இனி அனுமதிக்க முடியாது என்றும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறப்படாவிட்டால் புதிய அரசியலமைப்பு குறித்து மக்கள் கருத்து கணிப்பு வாக்கெடுப்பு நடத்த முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் கூறினார்.
ஒரு புதிய அரசியலமைப்பை வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற பெரும்பான்மையான மக்களின் ஒப்புதலை கருத்துக் கணிப்பு ஒன்றால் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.ஆர். கொண்டு வந்த இந்த அரசியமைப்பு முறையை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Comments are closed.