வடக்கு, கிழக்கு, பெருந்தோட்டப் பாடசாலைகளின் சுகாதார உட்கட்டமைப்புக்கு இந்திய அரசு உதவி
வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளின் சுகாதார வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த இந்திய அரசு நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.
கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே தலைமையிலான குழுவுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே இவ்வாறு நிதி உதவி வழங்கப்படும் என்று இந்தியத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளின் பாடசாலைகளுக்கும், அபிவிருத்தி அத்தியாவசியமாகவுள்ள சிறிய பாடசாலைகளுக்கும் உதவியளிக்குமாறு இதன்போது கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்பிரகாரமே வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் சுகாதார வசதிகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த இந்திய அரசு உதவி வழங்கும் என்று இந்தியத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
எதிர்காலத்தில் சிறிய பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் உதவியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சரிடம் அவர் கூறியுள்ளார்.
Comments are closed.