கந்தகாடு நிலையத்திற்கு பார்வையிட சென்றவர்களுக்கு கொரோனா இல்லை – இராணுவ தளபதி
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட சென்ற எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
116 பேரைக் கொண்ட குழுவினர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சென்றிருந்த போது சமூக ரீதியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.
சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்காக சென்ற இந்த குழுவினரால் சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தன.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுகாதார தரப்பினரால் கண்காணிக்கப்பட்டதுடன் P.C.R பரிசோதனைகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
P.C.R பரிசோதனை முடிவுகளின்படி 368 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்களுட சமூகத்தில் நோய்த் தொற்று ஏற்படவில்லை எனவும் இராணுவத தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஹோமகம பொலிஸ் அதிகாரி அலுவலகத்திலுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த அலுவலகத்தில் பணியாற்றிய பெண் பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதனை அடுத்தே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்று ஏற்பட்ட பெண் அதிகாரியின் மகன் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக கடமையாற்றி வந்த நிலையில் வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.